Skip to content Skip to footer

மௌலானா பதில்கள்

கேள்வி : மத்ரஸா அல்லது ஸ்கூலில் பெண் பிள்ளைகளுக்கு குர்ஆன் பாடம் கற்றுக் கொடுக்கும் ஆலிமாக்கள் விலக்கப்பட்ட காலங்களில் மாணவிகளுக்கு பாடம் நடத்தலாமா? பெண் பிள்ளைகளை அக்காலத்தில் ஓதச் சொல்லலாமா? சிலர் பாடம் நடத்துபவர்களுக்கும் மாணவிகளுக்கும் இந்த சட்டம் இல்லை என்கிறார்கள். விளக்கம் தேவை!

பதில் : விலக்கப்பட்ட காலத்தில் குர்ஆன் ஓதுவது, குர்ஆன் ஓதிக்கொடுப்பது, குர்ஆனைத் தொடுவது எதுவும் கூடாது. அது ஆசிரியை, மாணவி உட்பட அனைத்துப் பெண்களுக்கும் இதே சட்டம் தான். எனினும் அக்காலத்தில் ஆசிரியை குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் போது அதன் வார்த்தைகளை...

கேள்வி : மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்களில் ஆண் – பெண் இனப்பெருக்க மண்டலம், குடும்ப நல கட்டுப்பாடு பற்றி உள்ளது. மாணவ, மாணவியர்களுக்கு இந்த பாடங்களை விலங்கியல் ஆசிரியராகிய நான் போதிக்கலாமா?

பதில் : மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இனப்பெருக்க மண்டலம் பற்றி போதிப்பதால் அவர்களின் உணர்ச்சிகளை தூண்டி வழிதவறுவதற்குரிய அபாயம் உள்ளது. இக்காலத்தில் வாலிப சமுதாயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே கல்வித் துறைக்கு இதுபற்றி உணர்த்துவது கடமையாகும். மேலும்...

கேள்வி : ஒருவர் உதடுகள் அசையாமல் வரிகளின் மீது கை நகர்த்தியவாறு குர்ஆன் ஓதுகிறார். இவருக்கு குர்ஆன் ஓதிய நன்மைகள் கிடைக்குமா? இதே போல் தொழுகையில் உதடுகள் அசையாமல் கிராஅத் ஓதுகிறார். இவரது தொழுகை கூடுமா?

பதில் : ஹனஃபி மத்ஹபின் படி தொழுகையில் கிராஅத்-ஓதுதல் ஃபர்ளாகும். கிராஅத் என்பது குறைந்த பட்சம் தனக்கு கேட்குமளவு வாயசைத்து மொழித்து இருப்பது அவசியம். எனவே வாயசைக்காமல் ஓதினால் தொழுகை கூடாது. தொழுகைக்கு வெளியே இவ்வாறு ஓதினால் குர்ஆனை “ஓதிய” நன்மை...

கேள்வி : அலிஃப் – லாம் – மீம் இதன் பொருள் என்ன?

பதில் : அலிஃப் - லாம் - மீம் மற்றும் இது போன்று அத்தியாயங்களின் தொடக்கத்தில் வரும் எழுத்துக்கோவைகளுக்கு எவரும் திட்டவட்டமான பொருளை கூறவில்லை. இந்த எழுத்துக்கள் அல்குர்ஆனின் இரகசியங்களில் உள்ளவையாகும். இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். இதுவே...

கேள்வி : திருக்குர்ஆனை மடியில் வைத்து ஓதலாமா?

பதில் : திருக்குர்ஆனை ரைஹால் போன்றவைகளின் மீது வைத்து கிப்லாவை முன்னோக்கி ஒழுக்கமாக அமர்ந்து ஓதவதுதான் முறையாகும். ரைஹால் போன்றவைகள் கிடைக்கவில்லையென்றால், அல்லது தக்ககாரணமிருந்தால், கைத்தாங்கலாக மடியில் வைத்து ஓதுவது கூடும்.

கேள்வி : திருக்குர்ஆனை பொருள் அறிந்து ஓதினால்தான் நன்மை கிடைக்கும் என்று சிலர் கூறுகின்றனர். விளக்கம் தேவை!

பதில் : திருக்குர்ஆன், இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையாகும். திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கும், படிப்பினை பெறுவதற்கும் மிகவும் எளிதாக்கியுள்ளதாக 54:22 என்ற வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஒவ்வொருவரும் திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்வது அவசியமாகும். தனது பிள்ளைகள், மற்றும் குடும்பத்தினரைக் கற்றுக் கொள்ள ஆர்வமூட்டி...

கேள்வி : பொருள் அறிந்து குர்ஆன் ஓதுவது சிறந்ததா? பொருள் அறியாமலேயே ஓதுவதும் சிறந்ததுதானா? இரண்டிற்கும் நன்மையில் வித்தியாசம் என்ன?

பதில் : இரண்டுமே சிறந்ததுதான். எனினும், பொருள் அறிந்து குர்ஆன் ஓதுவது அதிக சிறப்புக்குரியதாகும். அதையும் விட சிறப்புக்குரியது, புரிந்த பொருளின்படி செயல்படுவதாகும். திருக்குர்ஆனை ஓதுவதில் உள்ள சிறப்புப் பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். 'குர்ஆனை...

கேள்வி : நான் சாதாரணமாக குர்ஆன் ஓதி முடித்துள்ளேன். தஜ்வீதுடன் அல்ஹம்து சூரா கூட ஓதவரவில்லை. எங்கள் ஊரில் மத்ரஸாவும் இல்லை. குழந்தைகளுக்கு எப்படி குர்ஆன் சொல்லிக் கொடுப்பது? தஜ்வீதுடன்தான் குர்ஆன் ஓத வேண்டுமா?

பதில் : திருக்குர்ஆனை தஜ்வீதுடன் ஓதுவது அவசியம். தஜ்வீது கலை தெரியவில்லையெனில் கற்றுக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். தஜ்வீதுடன் ஓத கற்றுக் கொள்ளும் வரை முன்னர் தெரிந்த முறைப்படி ஓதவும் ஓதிக் கொடுக்கவும். ஆனால் குர்ஆனை சரியாக ஓதும் முயற்சியையும் தொடர்ந்து...

கேள்வி : தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓதுவது அவசியமா? அவ்வாறில்லையெனில் குற்றம் ஏற்படுமா? விளக்கம் தேவை!

பதில் : இயன்ற அளவு எழுத்துக்களை சரியாக உச்சரிப்பதற்கும், அர்த்தத்தில் மாற்றமும் ஏற்படாமல் இருக்க சரியான இடங்களில் நிறுத்தி ஓதுவதற்கும் தேவையான அளவு தஜ்வீதை அறிந்ததிருப்பது அவசியம்! ஒரு மனிதர் தஜ்வீதை கற்பதற்கு மிக முயற்சி செய்தும் வயோதிகத்தினால் கற்றுக் கொள்ள...

கேள்வி : குர்ஆனை கற்கவேண்டும் என்ற மனஉறுதி இருந்தும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மனக் குழப்பமாக உள்ளது. குர்ஆனை கற்க ஓத என்ன வழி?

பதில் : தாங்கள் தங்கள் மஹல்லாவில் உள்ள ஆலிம்கள், ஹாஃபிழ்களிடம் தொடர்பு கொண்டு குர்ஆன் ஓதத் தொடங்குங்கள். அல்லாஹ் கிருபை செய்வான். “ரப்பிஷ்ரஹ் லீ ஸத்ரீ வயஸ்ஸிர்லீ அம்ரீ வஹ்லுல் உக்ததம் மின்ல் லிஸானி யஃப்கஹு கவ்லீ” (அல்குர்ஆன் 20:25-28) (எனது...

கேள்வி : குமர் கல்யாணம் என்று கூறி வரதட்சணை கொடுப்பதற்காக பணம் கேட்டால் நாம் கொடுக்கலாமா?

பதில் : நிக்காஹ் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஸஹாபாக்கள் மூலம் தரிபட்ட இபாதத்தாகும். எனவே இதை இபாதத் என்று எண்ணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி முறையில் நிறைவேற்றுவதற்கு தானும் முயற்ச்சிக்க வேண்டும்....